அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை விளம்பர தூதராகப் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கடந்த 2023ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது ரன்வீர் சிங்கின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோன் இணைந்துள்ளார். இதன் அறிவிப்பு கடந்த 6ஆம் தேதி வெளியான விளம்பரம் மூலம் தெரிவிக்கப்பட்டது. அந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் அபுதாபியில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு அவர்கள் செல்கின்றனர். அப்போது முதலில் ஒரு மியூசியத்திற்கு செல்லும் அவர்கள் மாடர்ஸ் ட்ரெஸில் இருக்கிறார்கள். 

Advertisment

பின்பு மற்றொரு இடத்திற்கு செல்லும் போது மற்றொரு மாடர்ன் ட்ரெஸில் இருக்கிறார்கள். இறுதியாக புகழ்பெற்ற ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்குச் செல்லும் போது ரன்வீர் சிங் ஷெர்வானி போன்ற ஒரு உடையிலும் தீபிகா படுகோன் உடல் முழுவதும் ஹிஜாப் போன்ற ஒரு உடையில் முகம் மட்டும் தெரிந்தபடி அணிருந்திருந்தார். இந்த உடையை அபயா என்றும் கூறப்படுகிறது. இது தற்போது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது. ஒரு தரப்பினர், இந்து மரபுகளை அவர் அவமதிப்பதாகவும் பெண் சுதந்திரத்தைப் பற்றி பேசும் ஒருவர் எப்படி மத நம்பிக்கைக்குக் கட்டுப்படுகிறார் என்றும் விமர்சிக்கத் தொடங்கினர். 

Advertisment

அதே போல் சிலர் அந்த மசூதிக்கு செல்லும் போது பெண் சுற்றுலா பயணிகள் தலையை மறைக்கும் படி உடை அணிய வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும் பல கிறிஸ்தவ பிரபலங்களும் இப்படித்தான் செல்கிறார்கள் எனவும் இதை விமர்சிப்பதை நிறுத்துங்கள் எனவும் பதிவிடுகின்றனர். இது தொடர்பாக தீபிகா படுகோனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் இணையத்தில் உலா வருகிறது. இதே போல் பதான் படத்தில் காவி நிறத்தில் அவர் கவர்ச்சியாக பிகினி உடை அணிந்திருந்ததால் அது மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என ஒரு தரப்பினர் தீபிகா படுகோனை கடுமையாக விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.