பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். அதன் பிறகு வேலை செய்யும் நேரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதாவது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வேலை செய்ய முடியும் எனத் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது. 

Advertisment

இதையடுத்து அவர் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக அப்பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மறைமுகமாக தீபிகா படுகோனை சாடியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் மற்றொரு படமான ‘கல்கி 2898 ஏடி’ பட இரண்டாம் பாகத்திலும் சமீபத்தில் தீபிகா படுகோன் நீக்கப்பட்டார். இதற்கு அவர் முன்பு பேசிய கருத்து தான் காரணம் என பரவலாக சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்து தீபிகா படுகோன் பேசாமலே இருந்தார். ஆனால் தற்போது அது குறித்து மௌனம் கலைத்துள்ளார். 

Advertisment

ஒரு தனியார் ஊடகத்தில் பேட்டியளித்த அவர், “ஒரு பெண்ணாக இருப்பதால், அது கட்டாயப்படுத்தப்படுகிறது என்றால் அப்படியே இருக்கட்டும். ஆனால் இந்திய சினிமாவில் பல சூப்பர் ஸ்டார்கள், பல ஆண்டுகளாக 8 மணி நேரம் தான் வேலை செய்கிறார்கள். அதே போல் பலர் திங்கள் முதல் வெள்ளி வரை தான் வேலை செய்கிறார்கள். வார இறுதி நாட்களில் வேலை செய்யமாட்டார்கள். இது ஒன்றும் இரகசிய செய்தி கிடையாது. ஆனால் அப்படி இருந்தும் அது ஒருபோதும் தலைப்புச் செய்தியாக மாறவில்லை” என்றார். மேலும் இந்தியத் திரைத்துறை ஒரு ஒழுங்கற்றத் திரைத்துறை என்றும் இதில் சில மாற்றங்களை நாம் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.