Advertisment

90வது வயதில் முதல் கிராமி விருது வென்ற ஆன்மீகத் தலைவர்!

18 (54)

இசையில் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது இந்தாண்டு 68வது வருடத்தை எட்டியுள்ளது. இதன் விழா அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கம் போல் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, ‘சிறந்த ஆடியோ புத்தகம், கதைசொல்லல் மற்றும் வாசிப்புப் பதிவு’ பிரிவில் விருது வென்றுள்ளார். இந்த விருது அவரது பேச்சு பதிவு ஆல்பமானா ‘மெடிடேஷன்ஸ்’-காக கொடுக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இவ்விருதை தனது 90வது வயதில் பெற்றுள்ளார் தலாய் லாமா. இந்த விருதை அவர் சார்பாக, அந்தத் ஆல்பத்தில் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர் ரூஃபஸ் வெய்ன்ரைட் பெற்றுக்கொண்டார். அவர் கூறியதாவது, “இந்த ஆல்பம், கருணை, அமைதி, மனநிறைவு மற்றும் மனிதகுலம் ஆகியவற்றின் தன்மையை இந்துஸ்தானி இசையில் உருவாக்கப்பட்டது. இது பல்வேறு கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஆல்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது கௌரமாகவும் பாக்கியமாகவும் இருக்கிறது” என்றார். 

Advertisment

இதனை தொடர்ந்து இந்த விருது தொடர்பாக தலாய் லாமா அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த கிராமி விருதை ஒரு தனிப்பட்ட வெற்றியாகக் கருதாமல், அது பகிர்ந்தளிக்க வேண்டிய உலகளாவிய பொறுப்பிற்கான அங்கீகாரமாக தலாய் லாமா கருதுகிறார். இந்த அங்கீகாரத்தை அவர் நன்றியுடனும் பணிவுடனும் பெற்றுக் கொள்கிறார். மேலும் இந்த விருது மூலம் அவர் ஆல்பத்தில் சொல்ல வந்த செய்தி இன்னும் பரவலாக பரவும் என அவர் நம்புகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலகளவில் மதிப்புமிக்க இசை விருதாக கருதப்படும் இந்த விருதை ஒரு ஆன்மீகத் தலைவர் பெற்றிருப்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது தலாய் லாமாவின் முதல் கிராமிய விருதாகும். ஆனால் இவர் 1989ல் நோபல் பரிசு பெற்றுள்ளார். இது திபெத்தின் விடுதலைக்காக அகிம்சை வழியில் அவர் மேற்கொண்ட வாழ்நாள் போராட்டத்திற்காகவும், உலகம் முழுவதும் அமைதி மற்றும் மனித விழுமியங்களை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய முயற்சிகளுக்காகவும் வழங்கப்பட்டது. மேலும் அமெரிக்கா, இத்தாலி மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் கௌரவ டாக்டர் பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

grammy award
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe