இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்பட்ட துண்டிராஜ் கோவிந்த் பால்கேவின் நினைவாக 2016ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அந்தாண்டின் சிறந்த திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்ட படைப்புகளுக்கு தாதா சாகேப் பால்கே சர்வதேசத் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே சர்வதேசத் திரைப்பட விருது வழங்கும் விழா, மும்பையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், ஜோதிகா, மாதவன், சாய் பல்லவி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற முக்கிய நடிகர்களின் பட்டியல் பின்வருமாறு.
சிறந்த படம்: ஸ்ட்ரீ 2
சிறந்த நடிகர்: கார்த்திக் ஆர்யன்
சிறந்த நடிகை: கிருத்தி சனோன்
சிறந்த இயக்குநர்: கபீர் கான் (சந்து சாம்பியன்)
சிறந்த படம்: கல்கி 2898 ஏ.டி.
சிறந்த தயாரிப்பாளர்: தினேஷ் விஜன்
சிறந்த படம்(கிரிடிக்ஸ் தேர்வு) : லாபட்டா லேடிஸ்
சிறந்த நடிகர்(கிரிடிக்ஸ் தேர்வு): விக்ராந்த் மாஸ்ஸி (செக்டர் 36)
சிறந்த நடிகை(கிரிடிக்ஸ் தேர்வு): நிதான்ஷி கோயல் (லாபாட்டா லேடிஸ்)
சிறந்த வெப் சீரிஸ் : ஹீராமண்டி
சிறந்த நடிகர் (வெப் சீரிஸ்): ஜிதேந்திர குமார் (பஞ்சாயத் 3)
சிறந்த நடிகை (வெப் சீரிஸ்): ஹுமா குரேஷி
சிறந்த இயக்குநர் (வெப் சீரிஸ்): சஞ்சய் லீலா பன்சாலி (ஹீராமண்டி)
சிறந்த வெப் சீரிஸ் (கிரிடிக்ஸ் தேர்வு): பஞ்சாயத்து சீசன் 3
சிறந்த நடிகர் (வெப் சீரிஸ்): வருண் தவான்
சிறந்த நடிகை (வெப் சீரிஸ்)(கிரிடிக்ஸ் தேர்வு): சோனாக்ஷி சின்ஹா ​​(ஹீராமண்டி)
திரைப்படத் துறைக்கு சிறந்த பங்களிப்பு: ஜீனத் அமன்
இசைத் துறைக்கு சிறந்த பங்களிப்பு: உஷா உதுப்
சிறந்த கலைஞர்: ஏ.ஆர். ரஹ்மான்
சிறந்த துணை நடிகை: ஜோதிகா
சிறந்த வில்லன் நடிகர்: ஆர். மாதவன்
சிறந்த வில்லன் நடிகை: வித்யா பாலன்
சிறந்த நகைச்சுவை நடிகர்: அபர்சக்தி குரானா
ஆண்டின் மிகவும் பன்முக நடிகர் : அல்லு அர்ஜுன்
ஆண்டின் மிகவும் பன்முக நடிகை: சாய் பல்லவி
சிறந்த இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
சிறந்த பின்னணிப் பாடகர்: மோஹித் சவுகான்
சிறந்த பின்னணிப் பாடகி: ஷில்பா ராவ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/03/19-9-2025-11-03-15-39-07.jpg)