டாடா படம் மூலம் அறிமுகமான இயக்குநர் கணேஷ் கே பாபு தற்போது ரவி மோகனை வைத்து கராத்தே பாபு எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கணேஷ் கே பாபு இயக்குநர் செல்வராகவனை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் ட்பக்கத்தில் பகிர்ந்த அவர், “புதுப்பேட்டை படம் நான் சினிமா பார்க்கும் விதத்தை மாற்றியது. அது டாடா படத்துக்கும் கராத்தே பாபு படத்துக்கும் வழிகாட்டியாக அமைந்தது. இந்தப் பாதையை நான் தேர்ந்தெடுத்ததற்கும் இயக்குநராக மாறியதற்கும் செல்வராகவன் சார் தான் காரணம். இன்று அவரை சந்தித்தது ஒரு வட்டம் முழுமை அடைந்த உணர்வை தருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us