காதலர் தினத்தை முன்னிட்டு வருடா வருடம் பல்வேறு காதல் திரைப்படங்கள் வெளிவருவது வாடிக்கை. அந்த வகையில் தற்பொழுது பான் இந்திய நவீன காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த ‘கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி’ திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்று இருக்கிறது? 

Advertisment

நாயகன் சந்தோஷ் சோபன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு வாழ்க்கையில் எதுவுமே சரியாக அமையவில்லை. படிப்பிலும் சுமார் தான். இருந்தும் தான் ஒரு இன்டீரியர் டிசைனர் ஆக வேண்டும் என்ற கனவோடு தன்னுடைய கோலை நோக்கி பயணிக்கிறார். வீட்டை விட்டு வெளியேறும் அவர், சென்னையில் வந்து தங்கி கிடைக்கின்ற வேலைகளை செய்து கொண்டு கடனாளியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து சென்னையில் சொந்தமாக ஐடி கம்பெனியில் வேலை செய்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என முயற்சியில் இருக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்மணி ஆன நாயகி மானசா வாரணாசி, எதிர்ச்சியாக நாயகனை சந்திக்க நேர்கிறது. இருவரும் ஒரே வீட்டில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அப்போது இவர்களுக்குள் காதல் பற்றிக் கொள்ள அதன் பின் அந்த காதலுக்கு வழக்கம் போல் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதிலிருந்து எப்படியாவது தங்கள் காதலை காப்பாற்றி வெற்றி பெற முயற்சிக்கும் இந்த காதல் ஜோடிக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன? அந்த அதிர்ச்சியில் இருந்து இவர்கள் மீண்டார்களா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

Advertisment

நவீன காலத்து காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய காதல் கதையாக விரிந்தாலும் அதற்கான ட்ரீட்மென்ட் மற்றும் கதை அமைப்பு கொண்ட நேர்த்தியான திரைக்கதையும் சுவாரசியமாக அமைந்து படத்தை பாஸ் மார்க் வாங்க வைத்திருக்கிறது. முதல் பாதையில் உணர்ச்சி பொங்கும்படியான சிறப்பான காதல் காட்சிகளாக நகரும் திரைப்படம், இரண்டாம் பாதியில் உணர்ச்சிபூர்வமான குடும்பம் சம்பந்தப்பட்ட காதல் படமாக மாறி இறுதிக்கட்டத்தில் பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறது. இறுதியில் ஒரு நிறைவான சிறப்பான காதல் படமாக அமைந்து இந்த காதலர் தினத்தில் ஒரு நல்ல காதல் படம் பார்த்த உணர்வை இந்த திரைப்படம் கொடுத்திருக்கிறது. படம் நம் ஏற்கனவே பார்த்து பழகிய கதைய அம்சம் கொண்ட படமாகவே இருந்தாலும் அந்த படத்தை உருவாக்கிய விதமும் காட்சி அமைப்புகளும் மிக பிரஷ்ஷாக அமைந்து பார்ப்பவர்களை ஒரு சீரியஸான சிறப்பான காதல் படம் பார்த்த உணர்வை இந்த ‘கப்பிள்ஸ் பிரண்ட்லி’ திரைப்படம் கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.

coupl2

சந்தோஷ் சோபன் நடிப்பில் காட்சிகள் இந்த கால இளைஞர்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறது. ஆரம்பத்தில் பொறுப்பற்ற இளைஞராக வரும் நாயகன், போக போக பொறுப்பான இளைஞராக மாறி அடுத்த பரிமாணத்திற்கு செல்லும் பொழுது ஏற்படும் மன உணர்வுகளை தன் நடிப்பின் மூலம் நேர்த்தியாக காண்பித்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகி மானசா வாரணாசி, மிக மிக இயல்பாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி பார்ப்பதற்கு மிக மிக அழகாக இருக்கிறார். அந்த அழகு தன் நடிப்பிலும் நன்றாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இவர் நடிப்பு அமைந்திருக்கிறது. யோகி பாபு, இந்த படத்தில் வழக்கம்போல் வருகிறார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நன்றாக சிரிப்பு மூட்டி கைதட்டல் பெற்றிருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவர் ஒரு வேலையை நிறைவாக செய்து படத்திற்கு வழி சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர்.

Advertisment

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு காதல் படத்திற்கு எந்த அளவு நேர்த்தியான ஒளிப்பதிவு தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். அதற்கு பக்கபலமாக ஆதித்யா ரவீந்திரனின் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒரு காதல் படத்திற்கு எந்த அளவு இசை தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து நல்ல படம் பார்த்த உணர்வை தன் இசை மூலம் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்திற்கு கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி என பெயர் வைத்திருக்கின்றனர் படக் குழுவினர். இந்தப் பெயர் வைத்ததற்காகவே இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் தணிக்கை குழு வழங்கியிருக்கிறது. முழு படத்தையும் பார்த்த பிறகு அதில் எந்த ஒரு இடத்திலும் விரசமான காட்சி அமைப்புகளோ, சர்ச்சைக்குரிய காட்சிகளோ, எதுவும் இல்லாமல் மிக மிக அழகாக வாழ்க்கைக்கு அவசியமான ஒரு காதல் படமாக அதுவும் பீல் குட் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் அவசியமா என்று எண்ணம் தோன்றுகிறது. படத்தின் டைட்டில் கப்பிள்ஸ் ஃப்ரண்ட்லி என வைத்ததற்கு ஒரே காரணத்துக்காக வலதுசாரி சிந்தனை கொண்ட தணிக்கை குழுவினர், இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. மற்றபடி வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் இது ஒரு சின்சியரான தரமான ஃபீல் குட் காதல் படமாக திரைக்கதை அமைப்பு மூலம் உருவாக்கி ரசிக்க வைத்திருப்பது படத்திற்கு, பிளஸ் ஆக மாறி படத்தையும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இருக்கிறது.

கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி - எ ஃப்ரெண்ட்லி கப்பிள்!