Advertisment

"அப்பாவின் சிறந்த படங்களின் வரிசையில் கூலி இல்லை" - சௌந்தர்யா ரஜினிகாந்த்!

WhatsApp Image 2026-02-07 at 11.51.29 AM

தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்டவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், வரைகலை வடிவமைப்பாளர் எனப் பன்முக திறன் கொண்டவராகத் திகழ்கிறார்.தமிழ் சினிமாவில் "கோவா" படத்தின் மூலமாகத் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதே நேரத்தில்,  ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தின் மூலமாக இயக்குநராகவும் அறிமுகமானார். அது போக, வரைகலை வடிவமைப்பாளராக படையப்பா, பாபா உள்ளிட்ட பல படங்களுக்குத் தலைப்பை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.  

Advertisment

இந்த நிலையில், அவர் தற்போது "வித் லவ்" என்ற படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில், டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் "அபிஷன் ஜீவிந்த்" கதாநாயகனாக நடித்துள்ளார். அனஸ்வரா ராஜன் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மதன் இப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் நேற்று (06-02-26) முதல்  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இப்படம் காலம் கடந்த வரலாற்றுப் படமாக இருக்கும் என்றும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த்தின் கூலி படம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதன்படி, "நான் எனது அப்பாவின் ரசிகை. கூலி படத்தில் ரஜினிகாந்த்தை இளமையாகக் காட்டும் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படம் எனக்குப் பிடித்திருந்ததா? என்றால் "ஆம்" பிடித்திருந்தது. அதே நேரத்தில், அவரது சிறந்த படங்களில் இதுவும் ஒன்றா? எனக் கேட்டால் "இல்லை" என்று தான் நான் சொல்லுவேன்" என்று கூறினார்.

tamilcinema daughter Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe