தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில் அகழாய்வுகள் நடத்திய நிலையில் அங்கு தாலி, நாணயம், பானை, ஏடுகள் என ஆயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்தது. இந்த பழங்கால பொருட்களை காட்சிப் படுத்தும் வகையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை ரெட்டியார்பட்டியில் 13.2 ஏக்கர் பரப்பளவில் 55 ஆயிரம் சதுர அடியில் ரூ.56 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிரம்மிப்பூட்டும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிக் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அருங்காட்சியக வளாகத்தில் வன்னி மரம் நட்டு வைத்து ரிமோட் மூலம் கல்வெட்டை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன் மற்றும் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பொருநை நதிக்கரை ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதன்முதலாக நெற்கதிர் குறியீடுடன் கிடைத்த பொருளை மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசாக அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். பின்னர் அருங்காட்சியகத்தை முதல்வர் பார்வையிட்டு மகிழ்ந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/20/10-37-2025-12-20-22-36-56.jpg)