குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற நடிகை சைரா வாசிம், தன்னுடைய சினிமா பயணத்தை இத்துடன் நிறுத்திக்கொள்வதாக கூறி பாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். டங்கல் திரைப்படத்தில் அமீர் கானின் மகளாக திரம்பட நடித்து பலரின் மனதில் இடம் பிடித்தவர் இவர்.

Advertisment

amir khan

காஷ்மீர் மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் இந்த படத்தை தொடர்ந்து சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்னும் படத்திலும் நடித்தார். அமீர் கானின் தயாரிப்பில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்தது. குறிப்பாக சீனாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. தற்போது ஸ்கை ஸ் பிங்க் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சினிமா பயணத்தை நிறுத்திக்கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

Advertisment

சினிமாவில் இனிமேல் நடிக்காமல் இருக்க காரணமாக அவர் கூறுவது. சினிமா தன்னுடைய மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானதாக இருப்பதால் இந்த முடிவை நான் எடுக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார். இதை ஒரு நீண்ட அறிக்கையாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார்.