அஜித் நடித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக சொல்லப்படும் நேர்கொண்ட பார்வை படம் ஜூலை மாத இறுதியிலேயே வெளியாக இருப்பதாக புது தகவல் வெளியாகி வருகிறது.

yuvanshankar raja

Advertisment

Advertisment

இப்படத்தின் ட்ரைலர் ஜூன் 12ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியாகி யூ-ட்யூப், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டானது.

பாலிவுட்டில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியான படம் ‘பிங்க்’. மூன்று பெண்களுக்கு நடந்த அநீதியை பற்றி பேசும் இப்படம், ஹிந்தி ரசிகர்களிடம் செம ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய ரீமேக் உரிமையை வாங்கினார் போனி கபூர். ஸ்ரீதேவி முன்பு ஒருமுறை அஜித்தை வைத்து படம் ஒன்றை தயாரிக்க ஆர்வம் காட்டினாராம். பிங்க் படம் பார்த்த பின்பு அஜித்தை வைத்து தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என தன்னுடைய விருப்பத்தை போனிகபூரிடம் தெரிவிக்க தற்போது அதை நிறைவேற்றியுள்ளார் போனி கபூர். தமிழில் அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க, டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் படத்திற்கான முழு புரோமோஷனில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத் இறங்கியுள்ளனர். இதனால் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகுவதற்கு முன்பே வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா நேற்று இரவு நேர்கொண்ட பார்வை படத்திற்கான பின்னணி இசையை தொடங்கியிருப்பதாக ட்வீட் செய்துள்ளார். யுவன் பின்னணி இசை என்றாலே அதில் ஒரு தனித்துவம் இருக்கும். பிஜிஎம் கிங் என்று கூட சமூக வலைதளத்தில் சொல்வது உண்டு. அஜித்துடன் அவர் பணிபுரிந்த அனைத்து படங்களிலும் பின்னணி இசை பேசப்பட்டிருக்கிறது.