உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப்பரவி வருகிறது.இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

yuvan

இந்நிலையில் மூன்றாவது முறையாகக் கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்கள் இந்தியா முழுவதும் பலரும் விளக்கு, டார்ச் ஒளி காட்டினார்கள்.

ஒருசிலர் தீபாவளி பண்டிகை போல வெடி வெடித்தும், சாலையில் கும்பலாக நின்றும் விளக்கு, டார்ச் ஒளியைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.சோஷியல் டிஸ்டன்சிங் பற்றி சற்றும் சிந்திக்காமல் இது ஒரு கொண்டாட்டம் போல புரிந்து கொண்டு செய்தவர்களை ட்விட்டரில் பலரும் கடுமையக விமர்சித்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா,இந்தியாவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டிய இரண்டு விஷயங்கள்.ஒன்று, கரோனா. இரண்டு, முட்டாள்தனம்” என்று இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Advertisment