yuvan talk about vijay and his son sanjay vijay

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் நீங்க முத்திரையை பதித்துள்ளார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் ஈடு செய்துள்ளார். சினிமாவாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து, ரசிகர்கள் மற்றும் குடும்பதினருக்கு அவர்அறிக்கை ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த யுவன் சங்கர் ராஜா பல கேள்விக்கு பதிலளித்தார். அந்தவகையில்பத்திரிகையாளர் ஒருவர்" யுவனிசம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த யுவன், "நடிகர் விஜய்யுடையமேனேஜர் ஒரு நாள் எனக்கு யுவனிசம் என்ற வாசகம் பொருத்திய டீ-ஷர்டை விஜய்யின் மகன் சஞ்சய் அணிந்திருக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தார். அதைப்பார்த்துஷாக்கான நான் சூப்பர் ப்ரோ என மெஜேச் அனுப்பினேன். ஆனால் சமீபத்தில் விஜய்யைசந்திக்கும் போது, என் பையன் புகைப்படத்தை நான்தான் உங்களுக்கு அனுப்பி வைக்க சொன்னேன். அவன் உங்க தீவிரமான ரசிகர் எனக் கூறினார். அது மிகவும் மகிழ்ச்சியான தருணம். அதனால் தான் அந்த புகைப்படத்தை எங்கும் பகிரவில்லை" எனக் கூறினார்.

Advertisment