/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/156_22.jpg)
ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கத்தில் ரியோ ராஜ், பவ்யா திரிகா நடிப்பில் உருவாகும் படம் 'ஜோ'. விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். இப்படம் வருகிற நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் 'உருகி உருகி' பாடலின் லிரிக் வீடியோ சில மாதங்களுக்கு முன்னாள் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பாடலாக ‘ஒரே கனா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை வைசாக் எழுதியுள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். மேலும் பாடலில் அவர் தோன்றியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா போன்ற ஒருமுன்னணி இசையமைப்பாளர், தங்களது படத்தில் இருப்பது படத்தின் எதிர்ப்பார்ப்பையும் மதிப்பையும் உயர்த்தும் என்று ‘ஜோ’ படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Follow Us