Published on 28/07/2018 | Edited on 28/07/2018

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே அந்த வரிசையில் சாம் சி ஸ் மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம். வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார். யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். விரைவில் வெளிவரும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.