/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/127_9.jpg)
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் இசைவெளியீடு சென்னையில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், "வெங்கட் பிரபு இந்தக் கதையைச் சொன்னபோது இந்தக் கதையை எப்படி பண்ணுவார் என்று யோசித்தேன். சில காட்சிகள் திரும்பத்திரும்ப வரும். அது ஒரு படமாக எப்படி வரும் என நினைத்தேன். ஆனால், படம் பார்த்த பிறகு எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. நீங்கள் எப்போதும் பார்க்கும் சிம்பு இந்தப் படத்தில் இருக்கமாட்டார். முற்றிலும் வேறான சிம்புவாக இருப்பார். சிம்பு - எஸ்.ஜே.சூர்யா இடையே நடக்கும் விஷயங்கள்தான் படம். இடையிடையே கல்யாணி ப்ரியதர்ஷன் வருவார். இந்த வகையான படம் இந்திய சினிமாவிலேயே இதுதான் முதல்முறை. இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் எனக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாருக்கும் இடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jango-inside-news-ad_50.jpg)