yuvan sankar raja

Advertisment

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் வசனங்கள் நிறைந்த ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு, படம் குறித்தஎதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘சுல்தான்’ படத்திற்கான பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது தெரிய வந்துள்ளது. படத்திற்கான இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட விவேக் - மெர்வின், படத்தின் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளனர். பெரிய அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பதால் தயாரிப்பு தரப்பு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி வெளியான படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்த இசை, விவேக் - மெர்வின் இசையமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.