
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
யுவன் சங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள் ஏராளம், சமூக வலைதளத்தில் அவருடைய பிறந்தநாளை சினிமா ஹீரோக்களுக்கு இணையாக வருடா வருடம் கொண்டாடி வருகிறார்கள். பிறந்தநாளை முன்னிட்டு பிரத்யேக போஸ்டர்கள், மாஷ் அப் உள்ளிட்டவற்றை வெளியிட்டு கொண்டாடினார்கள். மேலும், ட்விட்டரில் #HBDYuvan, #HappyBirthdayYuvan ட்ரெண்ட் செய்து இந்தியளவில் முதலிடம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தனக்கு வந்த வாழ்த்துகள் குறித்து யுவன் தனது ட்விட்டர் பதிவில், “இறைவனின் அருளால், அற்புதமான மனிதர்கள் மற்றும் அன்பான ரசிகர்கள் எனக்கு ஆசீர்வாதமாக கிடைத்துள்ளனர். எனது பிறந்த நாளில் எனக்குக் கிடைத்த அன்பால் திக்குமுக்காடியுள்ளேன்.
பாடல்கள், ரத்த தானம், மாஷ் அப், நல உதவிகள் என உங்கள் அன்பை நீங்கள் வெளிப்படுத்திய விதம் என்னை நெகிழச் செய்துள்ளது. உங்களுக்கு திருப்பி தர என்னிடம் அதிக அன்பும், நிறைய நிறைய இசையையும் தவிர வேறெதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.