Advertisment

மதம் குறித்து பேசியவருக்கு பதிலடி கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா... குவியும் பாராட்டுகள்!

Yuvan Shankar Raja

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா, தற்போது இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றி வருகிறார். அவர், குர்ஆன்-னில் இடம்பெற்றுள்ள அல்லா பற்றிய ஒரு வசனத்தை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்பதிவின் கீழே ரசிகர் ஒருவர் பதிவிட்ட கருத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீ கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட ரசிகர், "நான் உங்களை விரும்பியதும் பின் தொடர்ந்ததும் நீங்கள் யுவன் ஷங்கர் ராஜா என்ற அடையாளத்துடன் பிறந்த காரணத்தினால்தான். சமூகவலைதளம் மத பிரச்சாரத்திற்கான களமல்ல. அப்படி இருந்தால், உங்கள் பக்கத்திலிருந்து நான் நிரந்தரமாக விலக நேரிடும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இப்பதிவிற்குப் பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா, "சரி விலகுங்கள்" எனக் குறிப்பிட்டார்.

பின்னர் இப்பதிவை யுவன் ஷங்கர் ராஜா நீக்கிவிட்டபோதிலும், ரசிகர்கள் முன்னரே அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிட்டனர். தற்போது அந்த ஸ்க்ரீன் ஷாட் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

yuvanshankarraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe