yuvan shankar raja received honarary doctrate

Advertisment

யுவன் ஷங்கர் ராஜா, 1997-ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். முக்கியமாக இவரது பாடல்களை விட பின்னணி இசைக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இளைஞர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் யுவன் சினிமா துறையில் 25 ஆண்டுகளை கடந்து பயணித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடினார். இப்போது 'லத்தி', 'நானே வருவேன்', 'லவ் டுடே' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று (03.09.2022) நடைபெற்றது. இதில் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரபல விஞ்ஞானி டாக்டர் வி. பாலகுரு ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் டாக்டர் பட்டம் பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.