yuvan shankar raja kidding venkat prabhu vishnuvardhan

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, தற்போது ‘லாங் ட்ரைவ்’ என்ற இசை நிகழ்ச்சிகளையும், ரியோ ராஜ்-ஐ வைத்து ‘ஸ்வீட் ஹார்ட்’ என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இவரது இசையில் வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய் நடிப்பில் உருவாகும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

மேலும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதநாயாகியாக நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடைக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெங்கட் பிரபு மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் தலையில் கை வைத்துக்கொண்டு தனது ஸ்டூடியோவில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “இவங்க தொல்லை தாங்க முடியல...” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

'தி கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, கடந்த 29ஆம் தேதி அப்படத்திற்கான அடுத்த அப்டேட் இன்று (01.08.2024) வெளியாகும் என தெரிவித்திருந்தார். பின்பு அடுத்த நாளான 30ஆம் தேதி வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் இப்படத்தின் மூன்றாவது பாடல்தான் அடுத்து வெளியாகவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.