yuvan shankar raja joins to director ameer starring new movie

Advertisment

கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர், தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘ராம்’, ‘பருத்திவீரன்’, ‘ஆதிபகவன்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. படத்தை இயக்குவதில் கவனம் செலுத்திவந்த அவர், ‘யோகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அறிமுகமானார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின்நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="3e967056-a275-4ace-9683-e3562035baaa" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_9.jpg" />

இந்நிலையில், அமீர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,'அதர்மம்', 'பகைவன்' ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் அமீர் நடிக்கவுள்ளார். இவருடன் இணைந்து ஆர்யாவின் சகோதரர் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, தீனா ஆகியோர்நடிக்கவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Advertisment

இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுக்கும், அவர் நடித்த ‘யோகி’ படத்திற்கும்யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் அமீர் நடிக்கும் படத்திற்கு அவர் இசையமைக்க உள்ளதுகுறிப்பிடத்தக்கது.