யுவன் ஷங்கர் ராஜாவை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்

yuvan shankar raja honoured with golden visa by uae

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக்கௌரவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இதில் தொழில்முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறை, திரைத் துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல துறைகள் உள்ளடங்கும். இந்த கோல்டன் விசாவைப் பெறுபவர்கள்10 வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாகக் கருதப்படுவர்.

இந்த கோல்டன் விசாவைஇந்தியத்திரைத்துறையைச் சார்ந்தபல முன்னணி பிரபலங்கள் வாங்கியுள்ளார்கள். இந்தியில்ஷாருக்கான், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும், மலையாளத்தில்மோகன்லால், மம்முட்டி,துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும், தமிழில் கமல்ஹாசன், பார்த்திபன், சிம்பு, விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆண்ட்ரியா, மீனா உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தஐக்கிய அரபு அமீரகம் அவரைத்தொடர்ந்து தற்போதுஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவையும்கௌரவித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா, அண்மையில்புனிதத்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு 'உம்ரா' என்ற புனிதப் பயணத்தைமேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது கோல்டன் விசா பெறும்யுவன் ஷங்கர் ராஜா புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

uae yuvan shankar raja
இதையும் படியுங்கள்
Subscribe