Advertisment

ரியோ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா...

டிவி தொகுப்பாளராக பிரபலமடைந்த சின்னத்திரை நட்சத்திரமான ரியோ ராஜ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா என்னும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது, யூ-ட்யூபில் பிரபலம் வாய்ந்த பிளாக் ஷீப் குழு உருவாக்கியது.

Advertisment

rio raj

இப்படத்தை தொடர்ந்து தற்போது ரியோ ராஜ் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பத்ரி வெங்கடேஷ் அதர்வாவை வைத்து பாணா காத்தாடி, செம போத ஆகாத போன்ற படங்களை இயக்கியுள்ளார். ரியோவை வைத்து இயக்கும் மூன்றாவது படத்தை பாசிடிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Advertisment

டிவி தொகுப்பாளராக இருந்த கவினின் முதல் படமான நட்புனா என்னானு தெரியுமா படத்தில் ஹீரோயினாக நடித்த ரம்யா நம்பீசன் தற்போது ரீயோவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகையர் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

yuvanshankarraja rio raj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe