/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/129_11.jpg)
கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் நீங்க முத்திரையை பதித்துள்ளார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் ஈடு செய்துள்ளார். சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து, ரசிகர்கள் மற்றும் குடும்பதினருக்கு அவர்அறிக்கை ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த யுவன் சங்கர் ராஜா பல கேள்விக்கு பதிலளித்தார். அந்தவகையில்பத்திரிகையாளர் ஒருவர்" உங்கள் பாடல் வைரலாவது வழக்கம் தான் ஆனால். முதல்முறையாக நீங்க போட்ட 'ஹிந்தி தெரியாது போடா' டி- ஷர்ட் வைரலானது. இதைபற்றி உங்க கருத்து என்ன என்று யுவனிடம் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த யுவன்," கருத்து ஒன்னும் இல்ல. எனக்கு இந்திதெரியாது அவ்ளோதான். அவர்களைகாயப்படுத்தும் எண்ணம் இல்லை. எனக்கு தெரியாதுன்னு தான் சொன்னேன்" எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)