தமிழில் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இப்போது ராம் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை, செல்வராகவன் - ரவி கிருஷ்ணா கூட்டணியில் உருவாகி வரும் ‘7ஜி ரெயின்போ காலனி 2’, ராஜேஷ் - ஜீவா கூட்டணியில் உருவாகும் புதுப்படம் உள்ளிட்ட இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதனிடையே யுவன் ஷங்கர் ராஜா அவ்வபோது இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அந்த வகையில் கேஒய்என் வழங்கும் 'The U1niverse Tour' இசை நிகழ்ச்சி டிசம்பர் 13 முதல் தொடங்க இருக்கிறது. முதலாவதாக, சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்க இருக்கிறது. டிக்கெட் பதிவு செய்யும் முதல் ஆயிரம் பேருக்கு யுவனின் கையொப்பமிட்ட டி-ஷர்ட் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு யுவனுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் டிக்கெட் கேஒய்என் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.