Advertisment

“அவற்றையெல்லாம் கடக்க 'இஸ்லாம்' உதவியது...” -யுவன் சங்கர் ராஜா!

yuvan

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் 'வலிமை' படத்தில் பணியாற்றி வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார் யுவன்.

Advertisment

அதில், அஜித் குறித்தும் விஜய் குறித்தும் கேள்விகள் யுவன் சங்கர் ராஜாவிடம் கேட்கப்பட்டது. மேலும், 'வலிமை' படத்தின் பின்னணி இசைக்கான வேலை போய்க் கொண்டிருந்தது. கரோனா ஊரடங்கால் தாமதமாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

யுவனிடம் ரசிகர் ஒருவர், “அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பயம் என்ன? நீங்கள் அதை எப்படிக் கடந்தீர்கள்?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள யுவன், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்ததுண்டு. ஆனால் அவற்றையெல்லாம் கடக்க எனக்கு இஸ்லாம் உதவியது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். மேலும், தனது பெயரை அப்துல் காலிக் என்றுமாற்றிக்கொண்டார். 2015ஆம் ஆண்டு இஸ்லாமிய பெண் ஷாஃப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

yuvanshankarraja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe