விஜய் டிவியில், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இளையாராஜாவை கொண்டாடும் விதமாக 'Celebrating இசை' என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோர் கலந்துகொண்டு பாடகர்களை ஊக்குவித்தனர். இதில் பாடகர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்டை பரிசளித்து வாழ்த்தினார். இது மிக நெகிழ்வான தருணமாக அமைந்தது.
Follow Us