"‘மாநாடு’ பட பாடலை ஏன் அவங்கள பாட வச்சேன்னு கேட்கறாங்க" - யுவன் ருசிகரம்!

bfhssfbs

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரும் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து ‘மாநாடு’ படத்தில் இடம்பெற்றுள்ள 'மெஹெரசைலா' என்ற பாடலை முதல் பாடலாகப் படக்குழு வெளியிட்டது.

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாகப் பகிர்ந்துகொண்டார். அதில்... “வெங்கட் பிரபு படத்துல வேலை பார்க்குறது ஸ்பெஷல்தான். தற்போது வெளியாகி இருக்குற ’மெஹெரசைலா’ பாடலில்ஏன் பவதாரணியை பாட வச்சேன்னு கேட்கறாங்க. கொடுக்கலேன்னா சண்டைக்கு வருவாங்களே” என ஜாலியாக கலாய்த்தார்.

maanaadu yuvanshankarraja
இதையும் படியுங்கள்
Subscribe