allu arjun

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூனின் ஹிந்தி டப்பிங் படங்களுக்கு ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக யூ-ட்யூபில் அவருடைய ஹிந்தி டப்பிங் படங்கள் பெறும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

Advertisment

இந்நிலையில் போயபதி சீனு இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'சரைநோடு' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், கேதரின் தெரசா, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படம் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2017ஆம் ஆண்டு யூ-ட்யூபில் வெளியிடப்பட்டது. வெளியானது முதல் இன்று வரை இப்படம்30 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. யூ-ட்யூபில் முதல்முறையாக 30 கோடி முறை பார்க்கப்பட்ட முதல் இந்தியப் படம் இதுவாகும்.

Advertisment