Advertisment

அருள்நிதியை இயக்கப்போகும் யூ-ட்யூப் பிரபலம்!

குறும்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக அறிமுகமானவர்களைபோல, தற்போது யூ-ட்யூபிலிருந்து நிறைய பேர் தமிழ் திரைத்துறையில் இயக்குனர்களாக, நடிகர்களாக அறிமுகமாகி வருகின்றனர்.

Advertisment

arulnithi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அந்த வரிசையில் எருமசாணி யூ-ட்யூப் சேனல் பிரபலம் விஜய் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இவர் ஏற்கனவே நிறைய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

‘களத்தில் சந்திப்போம்' மற்றும் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகியவற்றில் அருள்நிதி நடித்து முடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்த படங்களில் நடிப்பதற்காக கதை கேட்டு வருகிறார். அப்போது விஜய் அருளிடம் கதை சொல்ல, அது பிடித்துப்போனதால் படத்தில் நடிப்பதற்து சம்மதம் தெரிவித்துள்ளார். உடனடியாக படத்தின் அடுத்த கட்ட வேலைகளை தொடங்கியுள்ளார் இந்த படத்தை தயாரிக்கப்போகும் அரவிந்த் சிங்.

இவர் அருள்நிதி நடித்த ஐந்து படங்களிலேயே ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் அருள்நிதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Youtube arulnithi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe