'Youth Icon' - award-winner Dhanush at the age of forty

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் தனுஷ். கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பிற்கான களத்தினை விரிவுபடுத்தி வருகிறார். சமீபத்தில் டோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் உடல் ரீதியிலான பல்வேறு விமர்சனங்களை சந்தித்தவர் தனது பலகீனமாக சொல்லப்பட்டவை எல்லாவற்றையும் தனது பலமாக மாற்றிய கெட்டிக்காரர். விரைவில் கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னையில்,தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது. இந்நிகழ்வில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இம்மாநாட்டில் யூத் ஐகான் விருது தனுஷ்க்கு வழங்கி கெளரவித்தது விழாக்குழு. இவ்விருதினை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்.

Advertisment

இந்நிகழ்வில் தனுஷ் பேசியதாவது “நாற்பது வயதில் யூத் ஐ கான் விருது வாங்குவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை; இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது என்பதை நினைவுபடுத்துவதாக உள்ளது; எனது தோற்றத்தை முதலில் சினிமா ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிறையகனவு கண்டு இப்போது இங்கே நிற்கிறேன்” என்றார்.