23 வயதான தமிழ் திரைப்பட துணை நடிகையான பத்மஜா திருவொற்றியூரில் வசித்து வரும் வாடகை வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

padmaja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னையிலுள்ள திருவொற்றியூரிலிருந்து மூன்று கி.மீ சுற்றுவட்டாரத்தில் இருக்கும் காலடிப்பேட்டையில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார் பத்மஜா. இவருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பவன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த ஜோடிக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருப்பதாக தெரிகிறது.

பத்மஜா தூக்கிட்டு தற்கொலை செய்த அன்று, அவருடைய வீட்டு தாழ்பால் ரொம்ப நேரமாக சாத்தப்பட்டே இருந்ததாகவும், பின்னர் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பத்மஜாவின் வீட்டு ஓனர் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பத்மஜாவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே போக, அங்கே பத்மஜா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அக்கம் பக்கத்தில் பத்மஜா குறித்து போலீஸ் விசாரித்ததில் திரைப்படங்கள், நாடகங்களில் தான் துணை நடிகையாக நடிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Advertisment

இதன்பின் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்மஜாவுக்கும் அவரது கணவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இவரை பிரிந்து பவன் ஆந்திரா சென்றுவிட்டதாக தெரிகிறது. பத்மஜா தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்பாக பெங்களூருவில் இருக்கும் தன்னுடைய அக்காவிற்கு அழுதுக்கொண்டே பேசி ஒரு வீடியோவை அனுப்பியிருக்கிறாராம். அதில் தற்கொலைக்கான காரணங்கள் ஏதும் சொல்லியிருக்கிறாரா விசாரணை நடத்தி வருகின்றனர்.