Advertisment

இளம் இசையமைப்பாளர் மறைவு - திரையுலகினர் அதிர்ச்சி!

young music director praveen kumar passed away

இராக்கதன், மேதகு உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் பிரவீன் குமார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரவீன்குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

Advertisment

இதையடுத்து அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளார். இவருக்கு வயது 28. இளம் வயதிலே அவர் மறைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பிரவீன் குமார் மறைவிற்கு தற்போது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

passed away music director
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe