ashutosh

மராத்திய சினிமாவின் இளம் நடிகர் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

Advertisment

மராத்திய மொழி சினிமாவில் நடிகராக வலம் வருபவர் ஆஷுடோஷ் பாக்ரே. இவர் மராத்தியில் பிரபலமான ‘பாகர், இச்சார் டர்லா பக்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் மராத்தியில் நடிகையாக இருக்கும் மயூரி தேஷ்முக் என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.

Advertisment

இந்நிலையில் நேற்று நடிகர் அஷுடோஷ் பாக்ரே தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில தினங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலை பற்றிய ஒரு பதிவையும் அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த தற்கொலைக்கான முழு காரணமும் தெரியாததால், காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.