chiranjeevi sarja

'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நாயகியாக நடித்தவர் மேக்னா ராஜ். இவர் தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபலமானவர் மேக்னா ராஜ்.

Advertisment

Advertisment

மேக்னா ராஜ், கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவைக்காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பிஸியாக சினிமாக்களில் நடித்து வந்தார் மேக்னா.

கடந்த ஜூன் 6ஆம் தேதி மேக்னாவின் கணரான சிரஞ்சீவிக்கு திடீரென நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சர்ஜாவைக் காப்பாற்ற முடியவில்லை. சிரஞ்சீவி சர்ஜாவுக்கு வயது 38தான் ஆகிறது.

தமிழ்திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகன் தான் சிரஞ்சீவி சர்ஜா என்பது நினைவுக் கூரத்தக்கது. இவர் நாயகனாக 22 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ரிஸல்ட் வெளியாகவில்லை.

2009-இல் 'வாயுபுத்திரா' படம் மூலம் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார் சிரஞ்சீவி சர்ஜா. கடைசி படம் 'ஷிவார்ஜுனா' ஆகும். இந்தப் படம் லாக்டவுன் அமலாவதற்கு சில நாட்கள் முன்புதான் திரைக்கு வந்தது. தற்போது 4 படங்களில் நாயகனாக நடித்து வரும் நிலையில், அர்ஜுன் சர்ஜாவின் திடீர் மறைவு கன்னட திரையுலகினரைபெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.