Skip to main content

“இரு இளைஞர்களின் வாழ்வில் நீங்களும் பயணிப்பீர்கள்” - கோபி & சுதாகர்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

 You will also travel through the lives of two young men - Gopi & Sudhakar

 

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், விக்னேஷ் SC போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி - சுதாகர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான முறையில் இனிதே நடந்தேறியது. 

 

வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து கதை பின்னப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்பு படுத்தி கொள்ளும் வகையான கதையில், ஃபேண்டஸி கலந்த ஒரு அட்டகாசமான நகைச்சுவை படமாக இப்படம் இருக்கும். 

 

படம் குறித்து கோபி - சுதாகர் கூறியதாவது, “இந்த கதையை கேட்டவுடனே இது வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இருக்காது எனப் புரிந்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் தான் படத்திலும் இருக்கும். ஆனால், அதோடு ஃபேண்டஸி கலந்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் பொழுதுபோக்கும் இப்படத்தில் இருக்கும். யூடியூப் வீடியோக்களில் சிரிக்க வைப்பது வேறு வகையானது. ஆனால், சினிமா எனும்போது ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். பரிதாபங்களில் இருக்கும் கோபி, சுதாகர் இதில் இருக்க மாட்டார்கள். ஆனால், இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நீங்களும் சில நாட்கள் இணைந்து பயணிப்பது போல் இருக்கும். ஒரு புது மாதிரியான நல்ல பொழுதுபோக்கு அனுபவமாக இப்படம் இருக்கும்” என்றனர்.

 

இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், வின்சு ரேச்சல் சாம், ரமேஷ் கண்ணா, மு.ராமசாமி, முருகானந்தம்,  பிரசன்னா, கௌதம், ஹரிதா, யுவராஜ் கணேசன், டிராவிட், பிரகாஷ், ஜீவா சுப்பிரமணியம், கோதண்டம், வெங்கல் ராவ் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

 

இப்படம் சென்னையைச் சுற்றி 40 நாட்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பொதுநிதியிலிருந்து இப்படம் உருவாக்கப்படுகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"கமெண்ட்ஸ் பாவங்கள்" கோபி & சுதாகர் கலகலப்பு சிறப்பு பேட்டி (வீடியோ)

Next Story

"பொழைப்பு ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு, அதை குழப்பி விடுறீங்களா?" - 'பரிதாபங்கள்' சுதாகர்

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

'உறியடி'... பல நல்ல படங்களைப் போலவே வெளிவந்தபொழுது கவனிக்கப்படாமல், வெளிவந்து சில ஆண்டுகள் கழித்து இணையத்தில் பார்க்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு படம். விஜயகுமார் நாயகனாக நடித்து, இயக்கி, தயாரித்திருந்த இந்தப் படத்தை 'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி வெளியிட்டார். வெளியான போது பெரிய வெற்றி பெறவில்லை இந்தப் படம். அப்போது விமர்சகர்களாலும், பின்னர் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி-2' படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விஜயகுமார் இயக்கத்தில் இந்த டீமில் '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை யூ-ட்யூப் சினிமா விமர்சகர் அபிஷேக் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் படத்தில் பணியாற்றிய பலரும் மேடையேறி தங்கள் அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்தனர்.

 

sudhakar speech



படத்தில் நடித்துள்ள 'பரிதாபங்கள்' புகழ் சுதாகரை மேடைக்கு அழைத்த அபிஷேக், "தமிழ் யூ-ட்யூப் தளத்தின் எல்லைகளை விரிவு செய்த 'பரிதாபங்கள்' புகழ் கோபியா சுதாகரா என்று பலரும் குழம்பும் யூ-ட்யூப் சூப்பர் ஸ்டாரை பேச அழைக்கிறேன்" என்று கூறினார். மேடைக்கு வந்த சுதாகர், கூச்சத்தில் நெளிந்துகொண்டே "பொழைப்பு ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு, அதை குழப்பி விடுறீங்களா? என்னைப் போய் சூப்பர் ஸ்டார்னுலாம் சொல்றீங்க, ஏண்ணே" என்று கூறி பேச ஆரம்பித்தார். "இந்தப் படத்தில் நடித்தது எனக்கு பெரிய வாய்ப்பு. 'உறியடி' படம் வெளிவந்த பொழுது அதைப் பார்த்து வியந்தேன். ஒரு தடவ விஜயகுமாரை டீ கடைல பார்த்து பேசினோம். அதுவே எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. 'உறியடி 2' பண்ணலாமானு அவரே கேட்டது எனக்கு இன்னும் சந்தோஷம். கதையை கேட்டுட்டு எனக்கு உண்மையிலேயே தூக்கம் வரல. அப்படி ஒரு கதை" என்று கூறி அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்தார். உடனே தொகுப்பாளர் அபிஷேக், "உங்களுக்கு கால் உடைஞ்ச கதையெல்லாம் சொல்லுங்க" என்று சொல்ல, சிரித்துக்கொண்டே "ஆமாங்க... இந்தப் படத்துல ஒரு பெரிய ஸ்டண்ட் பண்ணி என் கால் உடைஞ்சது. இப்போ சரியாகிடுச்சு. அது என்ன ஸ்டண்ட்னு படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க" என்று கூறினார்.

தமிழ் யூ-ட்யூப் ரசிகர்களிடையே புகழ் பெற்ற கோபி-சுதாகர் கூட்டணி தற்போது 'க்ரௌட் ஃபண்டிங்' முறையில் ரசிகர்களிடமிருந்தே நிதி திரட்டி ஒரு புதிய படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள்.