Advertisment

“நான் பேசும்போது நீ குறுக்கப் பேசாத” - மேடையில் கோபப்பட்ட ராதாரவி!

Advertisment

இளையராஜா இசையில் டி.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீஇராமானுஜர். ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீஇராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் டி.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி கூறுகையில், “இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று வெவ்வேறு கருத்துகள் பேசப்படுகிறது. அப்படியெல்லாம் பேசக்கூடாது. ஏனென்றால் ஆத்திகம் இல்லாமல் நாத்திகம் கிடையாது. நாத்திகம் இல்லாமல் ஆத்திகம் கிடையாது. அந்த காலத்திலேயே சீர்திருத்தக் கருத்துகளைப் பேசி எல்லோரையும் சமமாக நினைத்தவர்தான் இராமானுஜர்.

சீர்திருத்தவாதியாக நடிப்பது மிகவும் கஷ்டமானது. ஒருமுறை எனது தயாரிப்பில் கமல்ஹாசனை நடிக்க வைப்பதற்காக அவரது கால்ஷீட் கேட்டு அவரை சந்திக்கச் சென்றேன். நானும் கமலும் அப்போது நல்ல நண்பர்கள். "உன்னை வச்சு ஒரு படம் எடுக்கணும்" என்று அவரிடம் கேட்டபோது, “இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் படம் ரிலீஸ் ஆகட்டும். அப்புறம் பார்க்கலாம்" என்றவர், "நான் குளத்தில் போட்ட ஆமை மாதிரிவாயை திறந்துகொண்டே இருக்கணும். எப்போ குருவி விழுதோ அப்போ வாயை டக்குன்னு மூடிக் கொள்ளனும்" என்றார். கமல் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் பெரிய அறிவாளி. இன்றைக்கு சினிமாவில் நடிகர் திலகம் இல்லையென்றாலும் கமல்ஹாசன் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

Advertisment

நான் சொல்லித்தான் இதில் அவர் நடித்தார் என ஒய்.ஜி சொன்னார்.அப்படியெல்லாம் யாரையும் திரி போல தூண்டிவிட முடியாது என்றுராதாரவி பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் உட்கார்ந்திருந்த ஒய்.ஜி.மகேந்திரன் குறுக்கிட்டார். அதற்கு நான் பேசும் போது நீ குறுக்கப் பேசாத என்றார் ராதாரவி.பேசுவதை ஒழுங்கா பேசு என்றார் ஒய்.ஜி.மகேந்திரன். இது லேசான சலசலப்பை ஏற்படுத்தியது.

YG Mahendran Radharavi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe