மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது. இத்திரைப்படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கேபிஒய் வினோத், ரஃபி, 'புல்லட்' சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.