தமிழ் சினிமாவின் கரண்ட் ட்ரெண்டின் முன்னணி காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கும் யோகிபாபு தற்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து பேசியபோது...

Advertisment

yogibabu

''ரஜினி சார் என்னிடம், கோலமாவு கோகிலா படம் நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு அதில் ஒரு சிறிய வருத்தம் இருக்கிறது. நீங்கள் ஏன் படம் முழுவதும் வரவில்லை என கேட்டார். அதற்கு நான், படம் முழுவதும் வந்தால் வண்டியில் ஏறும் காட்சியின் சுவாரஸ்யம் குறைந்து விடும். அதனால் சிறிது நேரம் காணாமல் போய்விட்டு திடீரென தோன்றினால் நன்றாக இருக்கும் என எண்ணி அப்படி வந்தேன் என்றேன். அதற்கு அவரோ, ஓ அப்படியா... இருந்தாலும் படம் முழுவதும் நீங்கள் வந்திருக்கலாம் என ஆதங்கப்பட்டார்'' என்றார்.