Skip to main content

பைக் ரேஸால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வில் யோகிபாபு 

Published on 15/03/2019 | Edited on 15/03/2019
yb

 

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு 'பட்டிபுலம்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார். கதாநாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர். மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ். இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றி இவர் இப்படம் குறித்து பேசும்போது.... 

 

 

"நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன். அந்த பார்முலா படி யோகிபாபுவை இந்த 'பட்டிபுலம்' படத்தில் பயன்படுத்திக் கொண்டேன். ஐந்து நிமிடம்  பத்து நிமிடம் இல்லை. படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப்படுத்தி இருக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் 'பட்டிபுலம்' என்ற ஊர் இருக்கு. அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பது தான் கதை. இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம். படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம். படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் பாடகியாக அறிமுகமாகும் மஞ்சு வாரியர்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Manju Warrier is making her debut as a singer in Tamil

 

இந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு 'இனம்' படம் வெளியானது. அதன் பிறகு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்களை வைத்து 'சென்டிமீட்டர்' படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' மற்றும் 'சேவாஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

 

இந்நிலையில் மஞ்சு வாரியார் தமிழில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். 'சென்டிமீட்டர்' படத்தின் 'கிம் கிம்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முதலாக தமிழில் இந்த பாடலை மஞ்சு வாரியர் பாடியுள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் சில பாடல்களை பாடியுள்ள மஞ்சு வாரியர் 'கிம் கிம்' பாடலின் மூலம்  தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். 'கிம் கிம்' பாடலின் மலையாள லிரிக் வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.  

 

 

  

Next Story

'நான் ராம் இல்லடா... தாகூத் இப்ராஹிம்' - வைரலாகும் மோகன் படத்தின் கிளிம்ஸ்

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

'I am not Ram ... Thakooth Ibrahim' - The glimpse of the Mohan movie goes viral

 

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் 'மோகன்'. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் நடித்து வந்தார். 1999-ஆம் வெளியான 'அன்புள்ள காதலுக்கு' படத்தை இயக்கினார். கடைசியாக தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான 'சுட்ட பழம்' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் சில படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக 'ஹரா' படத்தில் நடித்து வருகிறார். குஷ்பூ, யோகி பாபு, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்டி இசையமைக்கிறார். கோவை எஸ்பி மோகன்ராஜ் தயாரிக்கும் இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்குகிறார்.

 

இந்நிலையில் 'ஹரா' படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் காட்சியில் மோகன் ஸ்டைலாக தோன்றுகிறார். மேலும், 'நான் ராம் இல்லடா... தாகூத் இப்ராஹிம்' என்று மோகன் பேசும் வசனம் பலரது கவனத்தை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.