hungry wolf

தமிழ் சினிமாவின் படைப்பாற்றல் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் புதுப்புது ஐடியாக்களால் நாளுக்கு நாள் மெறுகேறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அதே மனநிலையுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய புதுமையான திரைப்படங்களுக்கு பின்னால் தூணாக இருக்கின்றன. Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா. மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

"இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். வி ஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, சி.எஸ்.கே மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும், இந்த பெயரிடப்படாத படம் 'டார்க் காமெடி த்ரில்லர்' வகையைச் சேர்ந்தது. யோகிபாபு மற்றும் முனிஷ்காந்த் ராமதாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க ஒரு சில பிரபலமான மற்றும் முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்.