தமிழ் சினிமாவில் வடிவேலு விட்ட இடத்தை சந்தானம் பிடித்துக்கொள்ள தற்போது அவர்விட்ட இடத்தை யோகி பாபு பிடித்துக்கொண்டிருக்கிறார். எந்த படத்தை பார்த்தாலும் அதில் யோகி பாபு இல்லாமல் இல்லை. அவருக்கு இப்போது திருமணத்திற்காக பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. நடிகர் விஜய் கூட பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில், உன் திருமணத்திற்காவது தாலி கட்ட வருவியா என்று வம்பு இழுத்தார்.

Advertisment

sabeetha rai

இந்நிலையில் அண்மையில் யோகிபாபு ஒரு துணை நடிகையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த பெண்ணைதான் யோகி பாபு திருமணம் செய்துக்கொள்ள போகிறார் எனவும் வதந்தி பரவியது. இந்த வதந்தி குறித்து யோகி பாபுவும் சமீபத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இந்த வதந்திக்கு விளக்கமளித்துள்ளார் துணை நடிகை சபீதா ராய். ட்விட்டரில் வீடியோவாக வெளியிட்டுள்ள சபீதா அதில், “காமெடி நடிகர் திரு #யோகிபாபு அவருக்கும் எனக்கும் சக நடிகை என்பதைத் தாண்டி எனக்கும் அவருக்கும் எந்தவித சம்மந்தமில்லை நல்ல மனிதர் மற்றும் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார்.

constitution