பிக்பாஸ் யாஷிகாவுடன் பாவாடை தாவணியில் யோகிபாபு !

காமெடி நடிகர் யோகி பாபு நாயகனாக 'ஜாம்பி' படத்தில் ஆன்லைன் மற்றும் யூடியூப் பிரபலங்களுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

yogibabu

இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், 'பிஜிலி' ரமேஷ், ஜான் விஜய், 'லொள்ளு சபா' மனோகர், சித்ரா அக்கா உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒரு பாடல் தவிர படத்தின் படப்பிடிப்பு அனத்தும் முடிவடைந்தது. கடைசி கட்ட படப்பிடிப்பில் பெண் வேடமிட்டு யோகிபாபு நடித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. படத்தின் பெரும் பகுதியை ஈசிஆரில் உள்ள விடுதியைச் சுற்றி எடுக்கப்பட்டு வருகிறது. பிரேம்ஜி அமரன் இசையில், புவன் நல்லான் ஆர் இயக்கத்தில் உருவாகும் இப்படம் கோடையின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வசந்த் மகாலிங்கமும், வி.முத்துக்குமாரும் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

yashika anand yogibabu zombie
இதையும் படியுங்கள்
Subscribe