/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yogibabu_7.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, அவ்வபோது நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். அந்தவகையில், இவர் நடித்த ‘கூர்க்கா’, ‘மண்டேலா’ ஆகிய படங்கள்ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.இதனைத் தொடர்ந்து நடிகர் யோகிபாபு, இயக்குநர் அனுசரன்இயக்கும் ‘பன்னிக்குட்டி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஸ் மிதிலா எழுதி, இயக்கும் தமிழ் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.பெயரிடப்படாத இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்று (07.12.2021) பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்க,தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)