style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் சார்பில் சாம் ஆன்டன் தயாரிப்பில் யோகிபாபு நடித்த "கூர்கா" திரைப்படத்தை நிலையான வேகத்தில், சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே படக்குழு முடித்துள்ளது. மேலும் இது குறித்து இயக்குனர் சாம் ஆண்டன் கூறும்போது.... ''இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. "கூர்கா" கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர். நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா, மற்றும் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர். தற்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் கூர்கா, கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்" என்றார். காமெடி மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாக வளரும் "கூர்கா", ஒரு கடத்தப்பட்ட காரை அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.