Skip to main content

'கடத்தப்பட்ட காரை அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி....' - துப்பரியும் யோகி பாபு

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
gurkha

 

 

4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் சார்பில் சாம் ஆன்டன் தயாரிப்பில் யோகிபாபு நடித்த "கூர்கா" திரைப்படத்தை நிலையான வேகத்தில், சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே படக்குழு முடித்துள்ளது. மேலும் இது குறித்து இயக்குனர் சாம் ஆண்டன் கூறும்போது.... ''இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. "கூர்கா" கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர். நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா, மற்றும் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர். தற்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் கூர்கா, கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்" என்றார். காமெடி மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாக வளரும் "கூர்கா", ஒரு கடத்தப்பட்ட காரை அப்பாவி  கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் பாடகியாக அறிமுகமாகும் மஞ்சு வாரியர்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Manju Warrier is making her debut as a singer in Tamil

 

இந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு 'இனம்' படம் வெளியானது. அதன் பிறகு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்களை வைத்து 'சென்டிமீட்டர்' படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' மற்றும் 'சேவாஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

 

இந்நிலையில் மஞ்சு வாரியார் தமிழில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். 'சென்டிமீட்டர்' படத்தின் 'கிம் கிம்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முதலாக தமிழில் இந்த பாடலை மஞ்சு வாரியர் பாடியுள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் சில பாடல்களை பாடியுள்ள மஞ்சு வாரியர் 'கிம் கிம்' பாடலின் மூலம்  தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். 'கிம் கிம்' பாடலின் மலையாள லிரிக் வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.  

 

 

  

Next Story

'நான் ராம் இல்லடா... தாகூத் இப்ராஹிம்' - வைரலாகும் மோகன் படத்தின் கிளிம்ஸ்

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

'I am not Ram ... Thakooth Ibrahim' - The glimpse of the Mohan movie goes viral

 

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் 'மோகன்'. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் நடித்து வந்தார். 1999-ஆம் வெளியான 'அன்புள்ள காதலுக்கு' படத்தை இயக்கினார். கடைசியாக தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான 'சுட்ட பழம்' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் சில படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக 'ஹரா' படத்தில் நடித்து வருகிறார். குஷ்பூ, யோகி பாபு, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்டி இசையமைக்கிறார். கோவை எஸ்பி மோகன்ராஜ் தயாரிக்கும் இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்குகிறார்.

 

இந்நிலையில் 'ஹரா' படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் காட்சியில் மோகன் ஸ்டைலாக தோன்றுகிறார். மேலும், 'நான் ராம் இல்லடா... தாகூத் இப்ராஹிம்' என்று மோகன் பேசும் வசனம் பலரது கவனத்தை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.