style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், காமெடியனாக யோகிபாபுவும், விவேக்கும் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதில் நடிகர் யோகிபாபு தான் நடிப்பதற்கு கேட்டுள்ள சம்பளம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகி பாபு நடிப்பதற்கு இதுநாள் வரை நாள் ஒன்றுக்கு ரூ 2 லட்சம் சம்பளமாக வாங்கி வந்தார். சமீபத்தில் அதனை ரூ 3 லட்சமாக உயர்த்தியுள்ள நிலையில் தற்போது தளபதி 63 படத்தில் நடிக்க ரூ 80 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.