Advertisment

எமோஷனலான யோகி பாபு - ஆறுதல் படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி

yogibabu gets emotional at Bommai Nayagi Premiere Show

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'பொம்மை நாயகி'.ஷான் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகி பாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார்.நாளை (03.02.2023) இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரீமியர்காட்சி நடைபெற்றது.

Advertisment

அதில் ஜெயம் ரவி, ஆர்யா, விதார்த், மிர்ச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போதுபேசிய மிர்ச்சி சிவா, “மண்டேலா படத்திற்குப் பிறகு இந்த படம் யோகி பாபு கரியரில் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என வாழ்த்தினார். ஆர்யா பேசும்போது, "யோகி பாபு நடிகருக்கு தேவையான பல வகைகளில்அழகாக நடிக்கிறார். உண்மையிலேஅவரைபார்க்கையில் பொறாமையா இருக்கு..." எனக் குறிப்பிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். ஜெயம் ரவி பேசுகையில், "நல்ல படங்களைதேர்ந்தெடுத்து நடிக்கிறார். இறைவன் அருள் எப்போதும் அவருக்கு இருக்கு" என்றார்.

Advertisment

மூவரும் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அருகிலிருந்த யோகி பாபு எமோஷனலாக காணப்பட்டார். உடன்நின்றஆர்யா, மிர்ச்சி சிவா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் ஆறுதல் படுத்தியபடி யோகிபாபுவை அணைத்துக்கொண்டே பேசினர்.பின்பு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

jayam ravi Actor Arya actor yogi babu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe