Advertisment

விஷால் படத்தின் வேலையை முடித்த யோகிபாபு

yogibabu finished dubbing veeram vaagai soodum movie

Advertisment

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாகடிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில்நடிக்கின்றனர்.விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6f418872-a724-4ec8-9a09-314a2126e9bb" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_14.jpg" />

இந்நிலையில் நடிகர் யோகிபாபு 'வீரமே வகை சூடும்' படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளார். இத்தகவலை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor vishal actor yogi babu Veerame Vaagai Soodum
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe