/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Dq_0tF7UUAEQ8fL.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் 'தர்மபிரபு'. யோகிபாபு நாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘கன்னிராசி’ பட இயக்குனர் முத்துகுமரன் இயக்கவுள்ளார். மேலும் சித்திரகுப்தனாக கருணாகரன் நடிக்கிறார். எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமன் பதவிக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள். தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை. இப்படத்திற்காக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக கலை இயக்குநர் சி.எஸ்.பாலசந்தர் அரங்க அமைப்பிற்க்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும். சில பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)